வேலூர் மாவட்டத்தில் திருவலம் என்ற தேவாரப் பாடல் பெற்ற தலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. திருவலம் இரயில் நிலையத்திலிருந்து வடதிசையில் 13 கி.மீ. தொலைவில் உள்ளது.
இங்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார்.
வள்ளி நாயகியார் அவதரித்த தலம். இந்த மலையில்தான் முருகப்பெருமான் வள்ளியை மணம் புரிந்தார். மலை மீது வள்ளி சுனை என்ற தீர்த்தம் உள்ளது. மலையில் சிறிது தூரம் சென்றால் வள்ளிமலை சுவாமிகள் ஆசிரமம் உள்ளது. மலை மேல் செல்ல 471 படிகள் உள்ளது. |